ஓ காதல் என்னை காதலிக்கவில்லை பாடல் வரிகள்

Movie Name
Kodi Parakuthu (1988) (கொடி பறக்குது)
Music
Hamsalekha
Year
1988
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஓ...காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ...காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... 


தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்

தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்

பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வழிகிறேன்

என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்

போதும் போதும் பெண்ணே புன்னகை என்பது காதலின் பல்லவி

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...ஓ.ஹோ.. என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது

ஓ..ஹோ...கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது

என் புடவை உனது கற்பனை கேட்டு இடையை மறந்தது

என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது

தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

ஓ..காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ...காற்றும் உன்னை ஆதரித்ததம்மா

கன்னி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது

தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.