தங்கமே தமிழுக்கில்லை பாடல் வரிகள்

Movie Name
Duet (1994) (டூயட்)
Music
A. R. Rahman
Year
1994
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் நன்மை தூய
உருப் பளிங்கு போல் வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர் (இசை)

பெண் : படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந்
துடியிடையும் அல்லும் பகலும்
அனவரதம் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.

ஆண் : தானனா தானானானா தன்னன்னானா
தர தானனானா தானனானா
தன்னன்னானா

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு (இசை)

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

***

ஆண் : இது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு 

கல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய்ப் பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

***

ஆண் : இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க 

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு 

ஆண் : ஸாஸநிதப பாபமகரிகரிநி ஸம ஸபா ஸநீ பமகரிஸ
ஸகரிக மநிபம கமப 
பஸநிதமபா - ஸமகரிநிதா - கமபமபா -நிஸகநிஸா - ஸநிதப- கரிநிஸ- பபநீ - கரிஸா-பநீ -கமா-பாமாகாரி
ஸாநீதாப -கரிகமாபதா- பஸகரிநிஸ -கரிமாகரிஸ- ஸரிஸநிஸ-நிதாப-பஸநிதப-மகரி-கரிகமப-
கபஸ-கரிஸநித-ரிஸநிதப-கரிகமப-
பதபஸஸ- மதமககக-ஸமகரிரி-ஸநிதபபப
மகரிஸ-தநிஸஸஸ-
மகரிஸ-மரிஸநிப-ஸரிகமப 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.