காக்கிச் சட்டை போட்ட பாடல் வரிகள்

Movie Name
Shankar Guru (1987) (சங்கர் குரு)
Music
Chandrabose
Year
1987
Singers
Malaysia Vasudevan, S. P. Sailaja
Lyrics
Vairamuthu

ஆண் : ஏ..ஹே..ஏ..ஹே...
பெண் : ஏ..ஹே..ஏ..ஹே...

பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்

பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில
இதுக்குத் தானா குத்த வச்சான்

ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்

பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
உங்க வீட்டுத் திண்ணையிலே
அதுக்குத் தானா குத்த வச்சான்.....

பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்

பெண் : அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்லை
ஆண் : ஆத்துக்கு வடக்கே ஐயப்பன் தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே ஏ..ஹேய்..ஏ..ஹெய்..

பெண் : ஹெய்..தோப்புக்குள்ளே சத்தமிருக்கு
ஆமா நெஞ்சில் அச்சமிருக்கு
ஆண் : மானே என்ன அச்சம் உனக்கு
மாமன்கிட்டே மச்சமிருக்கு....

பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
ஆண் : கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்

ஆண் : வெளக்க அணைச்சா வெவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லை
பெண் : ஒத்திகை இங்கே உண்மையாப் போனா
கல்யாணம் நடக்கும் நமக்குள்ள...ஏ..ஹேய்..ஏ..ஹெ..

ஆண் : ஹெய்..இன்னும் என்னை நம்பவில்லையா
கன்னம் தர எண்ணமில்லையா
பெண் : தாலி இன்னும் செய்யவில்லையா
சேதி சொல்ல தேதி சொல்லையா...

ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்

ஆண் : பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
பெண் : எங்க வீட்டுத் திண்ணையிலே
இதுக்குத் தானா குத்த வச்சான்.....

ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.