என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Shankar Guru (1987) (சங்கர் குரு)
Music
Chandrabose
Year
1987
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu

ஆண் : என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
ஆத்து நீரில் குளிக்கும்போதும்
அயிர மீனு கடிக்கும்போதும்
தேடி வந்து சிரிக்கும்போதும்
தென்னந்தோப்பில் ஒளியும்போதும்
என்னப் பத்தி நீ ஏய்....என்ன நினைக்கிறே

பெண் : உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே
ஹோய் உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே
கண்ணு ரெண்டும் துடிக்கும் வரைக்கும்
கன்னம் கொஞ்சம் சிவக்கும் வரைக்கும்
தூக்கம் கெட்டு துடிக்கும் வரைக்கும்
இந்த மேனி இளைக்கும் வரைக்கும்
உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே

ஆண் : இரவு முழுதும் விழிச்சு உனக்கு
கடிதம் எழுத நெனச்சேன்
விடிஞ்சபோது எழுத வந்ததில்
பாதி தானே முடிச்சேன்

பெண் : முந்தா நேத்து சாயங்காலம்
முல்லைப் பூவை தொடுத்தேன்
முந்தா நேத்து சாயங்காலம்
முல்லைப் பூவை தொடுத்தேன்
உன்ன பாத்த அவரசத்தில்
நாரத்தானே முடிஞ்சேன்

ஆண் : என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே..

ஆண் : பேச நெனைக்கும் வார்த்தை உனது
வாசல் வந்தால் திக்கும்
புரட்டுகின்றேன் புத்தகத்தில்
நகரவில்லை பக்கம்

பெண் : ரெண்டு வார்த்தை பேச வேண்டும்
ரொம்ப நாளா ஆவல்
ரெண்டு வார்த்தை பேச வேண்டும்
ரொம்ப நாளா ஆவல்
விடிய மறுக்கும் ராத்திரிக்கு சேவல் கூட காவல்

ஆண் : என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
பெண் : உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கல
ஆண் : அஹஹாஹ் லாலாலலா
பெண் : லலலல லாலாலலலலலாலா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.