உனக்கென உனக்கென பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Vinnukum Mannukum (2001) (விண்ணுக்கும் மண்ணுக்கும்)
Music
Sirpi
Year
2001
Singers
S. P. Balasubramaniam, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
(உனக்கென..)

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உனது பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
(உனக்கென..)

கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்
(உனக்கென..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.