நதியே நதியே காதல் பாடல் வரிகள்

Movie Name
Rhythm (2000) (ரிதம்)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Unni Menon, Vairamuthu
Lyrics
Vairamuthu
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமேசிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமேதினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...

கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனாதேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி

பசுவினிலே பாலாகும் நீரே

தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி

சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்

நீர் நினைத்தால் பெண் நினைத்தால்

கரைகள் யாவும் கரைந்து போக கூடும்நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனேதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.