சகியே சகியே பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Youth (2002) (யூத்)
Music
Mani Sharma
Year
2002
Singers
Hariharan, Harini
Lyrics
Vairamuthu
சகியே சகியே சஹித்தால் என்ன

சுகதில் விழுந்து சுகித்தால் என்ன

உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக

உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

சகியே சகியே சஹித்தால் என்ன

சுகதில் விழுந்து சுகித்தால் என்ன

ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கோட்டில் மலர்ந்ததென்ன

உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால்

ஜூலை ஏழாம் நாள் மனி ஏழு பத்தோடு
உந்தன் காலங்கள் உறைந்ததென்ன

உன்னை முதலாய் முதலாய் பார்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால்

உன் உயிரின் பெண் வடிவம் நான்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே

ஏனென்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே

சகியே சகியே சஹித்தால் என்ன

உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் அணிந்ததென்ன

உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன

உன்னை கண்டதும் வாழ்வின் பாதி நீயென்று
வானில் அசரீரி ஒலித்ததென்ன

எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன

உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு

உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது

சகியே சகியே சுகித்தால் என்ன

சகியே சகியே சஹித்தால் என்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.