மேகம் கொட்டட்டும் பாடல் வரிகள்

Movie Name
Enakkul Oruvan (1984) (1984) (எனக்குள் ஒருவன்)
Music
Ilaiyaraaja
Year
1984
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு 

மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு 

ராகங்கள் தீராது 

பாடாமல் போகாது 

வானம்பாடி ஓயாது 


மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு 

மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு 

ராகங்கள் தீராது 

பாடாமல் போகாது 

வானம்பாடி ஓயாது 


எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும் 

தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும் 

நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள் 

குளிரெடுத்தால் வானத்திற்கே குடைகொடுங்கள் நீங்கள் 

பாட்டுக்கள் வான்வரை கேட்குமே 

என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே 

மழை சிந்தும் நீரும் தேனே 


மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு 

மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு 

ராகங்கள் தீராது 

பாடாமல் போகாது 

வானம்பாடி ஓயாது 


மழை வந்ததாலே இசை நின்று போகுமா 

புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமா 

ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் தான்சேன் 

ராகங்களால் மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன் 

ரசிகனின் ஆர்வத்தைப் பார்க்கிறேன் 

உங்கள் பாதத்தில் என்தலை சாய்க்கிறேன் 

இசை எந்தன் ஜீவன் என்பேனே 

லாலா லல்லல்லா லாலாலாலா 
லாலா லல்லல்லா லாலாலாலா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.