சௌக்கியமா கண்ணே பாடல் வரிகள்

Movie Name
Sangamam (1999) (சங்கமம்)
Music
A. R. Rahman
Year
1999
Singers
Nithyasree Mahadevan
Lyrics
Vairamuthu
சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா?
சௌக்கியமா சௌக்கியமா?

தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்!
திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்!
தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்!

தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என
விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்;
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்!

மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்; மனதை தழுவும் ஒரு அம்பானாய்;
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்; பருவம் கொத்திவிட்டு பறவையானாய்!
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்; சலங்கையும் ஏங்குதே!
அது கிடக்கட்டும் நீ . . .

(சௌக்கியமா)

சூரியன் வந்து வாவெனும் போது;
சூரியன் வந்து வாவெனும் போது;
சூரியன் வந்து வாவெனும் போது...
என்ன செய்யும் பனியின் துளி?
என்ன செய்யும் பனியின் துளி?

கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு;
தோடி கையில் என்னை அள்ளி எடு! (2)

அன்புநாதனே, அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென இளைத்தேன்!
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்!

என் காற்றில் சுவாசம் இல்லை!
என் காற்றில் சுவாசம் இல்லை!
என் காற்றில் சுவாசம் இல்லை!
என் காற்றில் சுவாசம் இல்லை!
அது கிடக்கட்டும் விடு; உனக்கென ஆச்சு!

(சௌக்கியமா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.