கண்களில் என்ன பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Uzhavan (1993) (உழவன்)
Music
A. R. Rahman
Year
1993
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
பெண் : ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..
ம்.ஹும்..ம்..ஹும்...ம்..ஹும்
ம்..ஹும்..ம்.ஹும்...ம்..ஹும்
கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா

***

பெண் : பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்றுதான்
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடும்
புது கோலம் போடு
விழி வாசலில் கலக்கம் ஏனையா

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா

***

ஆண் : ஏ..ஏ...ஏ..அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையை சேர்ந்தது

கண்களில் இல்லை ஈரமே
நெஞ்சினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல என்னை தாங்கினாய்

கண்களில் இல்லை ஈரமே
நெஞ்சினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல என்னை தாங்கினாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.