காடு திறந்தே கிடக்கின்றது பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Vasool Raja MBBS (2004) (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)
Music
Bharathwaj
Year
2004
Singers
Hariharan, Sadhana Sargam
Lyrics
Vairamuthu

காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது அடாடா..
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ....ஓ...ஓ....

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூல் கொண்டதோ
உன்னை விட்டு உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ

பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்து விடு
யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன்
பனித்துளியே என்னை அணைத்து விடு

உறவே உயிரே உணர்வே........
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ....ஓ...ஓ....

சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி
பேரின்பம் நாம் அடைவோம்
கால் தடங்கள் அற்ற பூமியிலே
காற்றாக நாம் நுழைவோம்

சித்திரை மாதத்தை நான் அணைத்து
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை நான் எரித்து
முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்

அடியே...சகியே....சுகியே
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ....ஓ...ஓ....
காடு திறந்தே கிடக்கின்றது......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.