காதல் பிரியாமல் கவிதை பாடல் வரிகள்

Movie Name
Panchatanthiram (2002) (பஞ்ச தந்திரம்)
Music
Deva
Year
2002
Singers
Kamal Haasan
Lyrics
Vairamuthu

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே

என்னை கவியாய்ச் செய்வாயா
இல்லை கனியாய்ச் செய்வாயா
பழி போடும் பாவையே
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது

நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாப்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு

மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீக்குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்....

காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம் பாம்பெனக் கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே

என் போர்வையோடு உந்தன் ரத்தம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா ஆ... ஆ... (காதல்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.