பூவுக்கெல்லாம் சிறகு பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Uyirodu Uyiraga (1998) (உயிரோடு உயிராக)
Music
Vidyasagar
Year
1998
Singers
KK
Lyrics
Vairamuthu
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(இது எப்படி.....)

(பூவுக்கெல்லாம்.....)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம்.....)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.