கும்மியடி பெண்ணே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Chellamae (2004) (செல்லமே)
Music
Harris Jayaraj
Year
2004
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
தந்தன நா ... தான தந்தன நா ....

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி


(கும்மியடி ...)


அடி செக்க செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்கவில்லடி நானும்
அந்த ராஜ கதவு திறந்த
பல ரகசியமும் தெரிஞ்ச
பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆகா வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போக்ஹும்
தான தனதான தந்தானே ...

அடி பஞ்சு மேதையில - ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவுல - அட ரெண்டுமே ஜெயகுமே

(கும்மியடி ...)

ஒரு போன்னுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்ப
அடி உறவு மட்டுமே நினைப்ப
உடுத்தி போன சேலை மறந்து
வெடி உடுத்தி நடப்ப
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்ப
தான தனதான தந்தானே ...

அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

(கும்மியடி ...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.