ரா ரா ரா ராமையா பாடல் வரிகள்

Movie Name
Baatsha (1995) (பாட்ஷா)
Music
Deva
Year
1995
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha
Lyrics
Vairamuthu
ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

===

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல (இசை)

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அஹ ஹா... ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன்
பாரையா ஓ ஹொ ஹொய்

===

ஆண் : ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல (இசை)
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓ ஹோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட

பெண்குழு : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.