பாட்ஷா பாரு பாடல் வரிகள்

Movie Name
Baatsha (1995) (பாட்ஷா)
Music
Deva
Year
1995
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டு ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
பற்றி எறியும் நெருப்பைப்போல சுட்டெறிக்கும் விழிய பாரு
ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட
ராஜாங்கத்தின் மன்னன் தானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பால் வடியும் முகத்தை பாரு
பசுவை போல குணத்தை பாரு
பச்சை ரத்தம் ஒழுகும் போது பச்சை குழந்தை சிரிப்பை பாரு
பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறுமை பாரு
தேகம் எல்லாம் வேகும்போதும் ஒளி குடுக்கும் மெழுகு பாருடா
இவன் ஜாதகத்தை மாத்தி வச்ச பாவி யாருடா
இந்த எரிமலையில் ஈர துணி போட்டது யாருடா

ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பம்பாய் ஆளும் ராஜா பாரு
படமெடுக்கும் படையை பாரு
பாஷா பேரில் கப்பல் பாரு
பாதம் கொட்டும் கப்பம் பாரு
பத்து மாடி கட்டடமெலாம் பாஷா வந்தா பணியும் பாரு
நாசிக் நகரில் நோட் அடிச்ச பாஷாவுக்கும் பங்கு பாருடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.