ஆரிய உதடுகள் பாடல் வரிகள்

Movie Name
Chellamae (2004) (செல்லமே)
Music
Harris Jayaraj
Year
2004
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியும் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே

(ஆரிய ...)

இதில் யாரு தோல்வியுறும் போதும்
அது தான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மன கிடங்குகள் தீப்பற்றி திதிக்கணும்

(ஆரிய ...)


எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது முக பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் சூரழகா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா ?
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா ? நெஞ்சா ?
ஒவ்வொரு பாகமும் பிடிக்கும் ,
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களின்
முனகலிடும் ஒலி பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே
கலையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்
என் நாயகன் என்னை பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறும ?
பிற பெண்கள் மேல் மனம் போகுமா ?
கண்களே நீயே போனால் வேறு பார்வை வருமா ?

(ஆரிய ...)


தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய்பிறை முழு நிலவாகும்
குறை குடமாய் நான் இருந்தேன்
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன் ?
ஊனோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்
ஜீவித நதியென விரைந்தே
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான்
பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான்
அடி காற்றினால் வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னதான் எதிர் பார்கிறாய்

ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தோடும

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.