மலரே தென்றல் பாடும் பாடல் வரிகள்

Movie Name
Veetla Vishesanga (1994) (வீட்ல விசேஷங்க)
Music
Ilaiyaraaja
Year
1994
Singers
K. J. Yesudas
Lyrics
Vairamuthu
ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ..
எவர் இதை மாற்றுவது

மலரே தென்றல் பாடும் கானம் இது

***

ஆண் : பூபாளம் கேட்கும் அதிகாலையும்
பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்
நீ பேசும் பேச்சு மணிவாசகம்
உள்ளம் எனும் வீடெங்கும்
உன்னழகை நான் தானே
சித்திரத்தை போல் என்றும்
ஒட்டி வைத்து பார்த்தேனே
எனைத் தழுவும் இளந்தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

***

ஆண் : காட்டாறு போல சில வேளையில்
காவேரி ஓடும் பல பாதையில்
ஆனாலும் ஓர் நாள் கடல் சேர்ந்திடும்
நாளான போதும் அது நேர்ந்திடும்
திக்குத் திசை தோன்றாமல்
வண்ணக்கிளி போனாலும்
தான் இருந்த கூட்டைத்தான்
தேடி வரும் எந்நாளும்
இருமனமும் ஒரு மனதாய்
இணைந்திடும் நாள் வாய்த்ததே

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ..
எவர் இதை மாற்றுவது

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.