புன்னகை புரியாதா புன்னகை பாடல் வரிகள்

Movie Name
Vettaiyaadu Vilaiyaadu (1989) (வேட்டையாடு விளையாடு)
Music
Chandrabose
Year
1989
Singers
K. J. Jesudass, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
ஆண் : புன்னகை புரியாதா புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை
பெண் : புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இருவரும் : புன்னகை புரியாதா.....

ஆண் : உள்ளம் கோயிலாய் கண்கள் தீபமாய்
மண்ணில் வாழுவேன் உனக்காக
பெண் : முள்ளில் தூங்குவேன் தீயில் நீந்துவேன்
உயிர் கொண்ட பெண்மை உனக்காக

ஆண் : புயல் வரும்போதும் மழை வரும்போதும்
மயில் மடி சாய்ந்து மகிழ்ந்திருப்பேன்

பெண் : புன்னகை புரியாதா புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை
ஆண் : புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இருவரும் : புன்னகை புரியாதா.....

பெண் : பாதி தூக்கத்தில் வாழும் ஏக்கத்தில்
பார்க்கும் நோக்கத்தில் துடித்தேனே
ஆண் : வளையல் ஓசைக்கும் கொலுசின் பாஷைக்கும்
தனிமையில் ஏங்கி தவித்தேனே
பெண் : நிலவுக்கு என்னை நீ அழைத்தாலும்
புடவையில் ஏணி அமைத்திருப்பேன்

ஆண் : புன்னகை புரியாதா புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை
பெண் : புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இருவரும் : புன்னகை புரியாதா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.