குறுந்தொகை கொண்டாடும் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Idam Porul Yeval (2015) (இடம் பொருள் ஏவல்)
Music
Yuvan Shankar Raja
Year
2015
Singers
V. V. Prassanna, Sonia
Lyrics
Vairamuthu
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

இன்பது பால் சொல்லும் இளய வேந்தே
பொருட் பாலை எப்போது காட்டுவாய்

ஈசன் எழுதிய ஓலை களில்
அக்கால காதல் உருவாகும்

ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்

நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா

குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட் பாலை உன்னோடு யோசிப்பான்

சரி மோகம் என்னும் மேகம் இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட
உண்மை தோணுமே

இது அவ்வை யாரின் கேள்வி என் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும் போது அழகாய் வைக்கிறாய்

இல்லறம் புல்லா வினைத்தொகையும் அளபேடயும் முதல் பாத்து
சத்தியமடி தமிழ் நமக்கு

உணவளிக்கும் தடை எத்து பொய்யோ நீ சொல்வது மெய்யோ
நம்பவா நான்

குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட் பாலை உன்னோடு யோசிப்பான்

உன் மூளை கொண்டு பார்த்தால் அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும் போது நேசம் தோன்றுமே

விழி மூடி கொண்டு காண என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண மூளை வேணுமே

கணித மேதை ராமானுஜம் பெத்த பொண்ணு நீ தானா
கற்பனை பண்ணும் மஹா கவி கம்பன் மகன் நீ தானா
அம்மெ தமிழில் எமை நம்பி வா வா

குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

இன்பத்து பால் சொல்லும் இளய வேந்தே
பொருட் பாலை எப்போது காட்டுவாய்