எந்த வழி போகுமோ பாடல் வரிகள்

Movie Name
Idam Porul Yeval (2015) (இடம் பொருள் ஏவல்)
Music
Yuvan Shankar Raja
Year
2015
Singers
Vaikom Vijayalakshmi
Lyrics
Vairamuthu
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

கலூச்சான் குருவி முள்லுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்

வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

வெளுத்தது பாலு கருத்தது காக்கா
இது தான் இது தான் ஏழ மக்கா

ஒரு சொத்து கண்ணீர் உள்ளன் கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்கா

நேத்து வச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே

அந்த கூழ பகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே

பாசக் கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே

இது போன வாழ்க்க இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்ப

ஒததையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க
தோதா உயிர் வேணுமப்பா

ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம் தான்

சித்த பந்தம் கூடி வந்தா
சேந்த தெல்லாம் சொந்தம் தான்

சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காதுக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்

வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.