அய்யங்காரு வீட்டு அழகே பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Anniyan (2005) (அந்நியன்)
Music
Harris Jayaraj
Year
2005
Singers
Hariharan, Harini
Lyrics
Vairamuthu
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே

உன் போல் அழகி பிறக்கவும் இல்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை

உன் போல் சமத்து உலகினில் இல்லை
காதலன் சமத்து காதலில் தொல்லை

அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே

மகரந்த பொடிகளை எடுத்து
அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து
திரு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி
வண்ணம் செய்தானோ
ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி
பூக்கள் செய்தானோ

உன் உதடு சேர்ந்தால்
பூப்படையும் வார்த்தை
நம் உதடு சேர்ந்தால்
பூப்படையும் வாழ்கை

அள்ளி சேர்த்தே உந்தன்

உயிருக்குள்
அனுமதி ஒரு முறை

அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே

உச்சி வானில் தத்தி தாவி இழுத்து
பொன் நட்சத்திர தோரணங்கள் சமைத்து
நீ முத்து தாமரை பந்தல் கீழே
மாலை கொள்வாயா
உன் முத்தாலே வானும் மண்ணும்
ஈரம் செய்வாயா

வான்மழையில் நனைந்தால்
பயிர்கள் உருவாகும்
ஆண் மழையில் நனைந்தால்
உயிர்கள் உருவாகும்

ஆ தயங்காதே மெல்ல

தொடங்கட்டும் அழகிய தவறுகள்

அய்யங்காரு வீட்டு அழகே

அய்யங்காரு வீட்டு அழகா

அய்யங்காரு வீட்டு அழகே
உன் போல் அழகி பிறக்கவும் இல்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை

உன் போல் சமத்து உலகினில் இல்லை
காதலன் சமத்து காதலில் தொல்லை

அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

அய்யங்காரு வீட்டு அழகா

அய்யங்காரு வீட்டு அழகே

அய்யங்காரு வீட்டு அழகா
அழகா.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.