சிலுக்கு மரமே பாடல் வரிகள்

Movie Name
Paayum Puli (2015) (பாயும் புலி)
Music
D. Imman
Year
2015
Singers
Divya Kumar, Shashaa Tirupati, Sharanya Gopinath
Lyrics
Vairamuthu
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா
வா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா
வா வா வா வா வா வா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

கல்யாண பேச்சு கை கூடி போச்சு
ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட
வா வா வா வா வா வா
நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா
வா வா வா வா

Baby it is always true
People said i love you
Life is never a film I say
It feels healthy strange
You are the one for me believe
You are the one for me just feel
Lets fly.. into a world so divine...

என்னை எல்லாரும் எதுக்க
வல்லூறு தூக்க
எவ்வாறு நீ தடுப்ப
உன்ன ரெண்டாக மடிச்சி
கையோட எடுத்து
பையோட மறச்சிக்குவேன்

நான் வைகை ஆத்து வெள்ளத்தோட போனா
நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா
நான் நீர்க்கோழி போல நீந்துவேன்
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்
அடி என் ஆசை பெண்ணே
அஞ்சாதே கண்ணே
அம்பாரி சாஞ்சாளும் பொன் மானே சாயாது
வா வா வா வா வா வா வா

நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா

என்ன குத்தாலம் காட்டில்
சித்தானை மரிச்சா அப்போது என்ன பண்ணுவ
உன்ன செந்தூக்க தூக்கி
செங்குன்றில் ஏறி சித்தானை கீழ தள்ளுவேன்

ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா
நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா
நான் பாயும் புலியாய் மாறுவேன்
அந்த பாதாளம் வரையில் சீறுவேன்
அடி என் மஞ்ச கிளியே
மஞ்சத்தில் சேர்ப்பேன்
வேர்வைக்குள் நீராடி போர்வைக்குள் போராடவா போராடவா


சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

கல்யாண பேச்சு கை கூடி போச்சு
ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட
வா வா வா வா வா வா
நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.