நினைத்தால் நெஞ்சுகுழி பாடல் வரிகள்

Movie Name
Appu (2000) (அப்பு)
Music
Deva
Year
2000
Singers
Hariharan, Harini, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ… ஏனோ…. ஏனோ… ஏனோ…

காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ
புடவை அடிகடி நழுவும் அது ஏனோ
ஏனோ… ஏனோ… ஏனோ… ஏனோ…
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

பால் வடியும் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ

ஒளியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ

வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ

அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ… ஏனோ…. ஏனோ… ஏனோ…

காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ… ஏனோ…. ஏனோ… ஏனோ…

காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.