தாய் மடியே உன்னை பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Red (2002) (ரெட்)
Music
Deva
Year
2002
Singers
Tippu
Lyrics
Vairamuthu
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

விண்ணை இடிக்கும் தோள்கள்
மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளி கொடுத்த கைகள் அசைவிழந்ததென்ன
கனல்கள் தின்னும் கண்கள்
கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை
உயிர் குறைந்ததென்ன
பாரத போர்கள் முடிந்த பின்னாலும்
கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

படை நடத்தும் வீரன்
பசித்தவர்கள் தோழன்
பகைவருக்கும் நண்பன் படும் துயரம் என்ன
தாய் பாலாய் உண்ட ரத்தம்
தரை விழுந்ததென்ன
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி தாமதமாக வருவதென்ன

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.