செல்லா நம் வீட்டுக்கு பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Poovellam Un Vasam (2001) (பூவெல்லாம் உன் வாசம்)
Music
Vidyasagar
Year
2001
Singers
Harish Raghavendra, Malaysia Vasudevan, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
இது மாடி வீடு நம் ஜோடி வீடு
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
தெய்வம் வந்து வாழும் வீடு

ஜன்னல் வழியே காற்றே வருக
கதவு வழி செல்வம் வருக
வாஸ்து பார்த்தே வாசல் வைத்தோம் வாழ்க்கை செழிக்க
முன்னே காணும் புல்வெளி வாழ்க
மொட்டை மாடி ரோஜா வாழ்க
ஊமை தென்றல் ஓடி வரட்டும் ஊஞ்சல் அசைக்க
எங்கள் இதயம் அடுக்கி வைத்து
இந்த இல்லங்கள் எழுந்ததம்மா
நீ சுவரில் காத்து வைத்தால்
மன துடிப்பு கேட்கும் அம்மா
நம் சொந்தம் வளர்ந்திருக்க பந்தம் தொடர்ந்திருக்க
தலைமுறை இருபது வாழிய நம் வீடு
செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்

வீடு மனைவி பிள்ளை எல்லாம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை
நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம் நன்றி சொல்கிறோம்
இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால் இங்கே ஒரு நாய்குட்டியாக
வந்து வாழும் வரமே வேண்டும் உன்னை கேட்கிறோம்
இந்த வீடு வந்த நேரம் மழை பொன்னாய் பொழிந்ததம்மா
அந்த மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா
இந்த சொந்தம் நெருங்கி வர சொர்க்கம் அருகில் வர
சூரியன் உள்ளவரை வாழிய நம் வீடு
செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
இது மாடி வீடு நம் ஜோடி வீடு
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
தெய்வம் வந்து வாழும் வீடு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.