ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Kadaikan Parvai (1986) (கடைக்கண் பார்வை)
Music
V. S. Narasimhan
Year
1986
Singers
P. Jayachandran, P. Susheela
Lyrics
Vairamuthu

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
வாராயோ எந்தன் தேவி
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

ஆஆஆஆ.....ஆஆஆஆ...ஆஆஆஆ..
கண்ணா என் மேல் பிழையே இல்லை
சிறையை முறிக்க சிறகில்லை
கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை
வெளிச்சம் இருந்தும் பகலில்லை
அடைந்தேன் உன்னை இதுவே போதும்
இனியுன் ராகம் இவளின் வேதம்

ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ
பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ
கனவா நனவா நீதானா நீயேதானா
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

உன்னை எண்ணி பாடும்போது
நெருப்பை சுடும் என் பெருமூச்சு
கண்ணா உன்னை கண்ணால் கண்டேன்
சருகோ மீண்டும் தளிராச்சு
இதயம் எங்கும் இன்பம் கொள்ளை
இனி என் வாழ்வில் இரவே இல்லை

கடலிலே சேர்ந்த
ஆறொன்று மீண்டு வருகின்றது
சொன்ன சொல் இன்று மாறாமல்
தீண்ட வருகின்றது
துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது

ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
ஓடோடி வந்தாள் தேவி
ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.