நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் பாடல் வரிகள்

Movie Name
Kadaikan Parvai (1986) (கடைக்கண் பார்வை)
Music
V. S. Narasimhan
Year
1986
Singers
Malaysia Vasudevan
Lyrics
Gangai Amaran

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளி வச்சே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே

கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு
மாலை வேளை போதை ஏறும் அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே

ஊரு உறங்கும் வேளையிலே
ஒதுங்கி நீயும் வா மயிலே
மாமன் இருக்கான் தனிமையிலே
சரசம் பாட வா குயிலே

ஊரு உறங்கும் வேளையிலே
ஒதுங்கி நீயும் வா மயிலே
மாமன் இருக்கான் தனிமையிலே
சரசம் பாட வா குயிலே

ஏதோ ஒரு வேகம் கூடுது
தெனம் தெனம் தேகம் வாடுது
முந்தான சரியாய் நின்னாளே
முன்னூறு கதைய சொன்னாளே
எம்பாடு கொண்டாட்டந்தான் அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு
மாலை வேளை போதை ஏறும் அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே

பூவும் நாரும் இணைஞ்சிருச்சு
பூச நேரம் நெருங்கிருச்சு
பாலும் பழமும் கலந்திருக்கு
மனச ஒண்ணா சேர்த்துக்கிச்சு

புது சுகம் வந்து மோதுது
தெனம் தெனம் சிந்து பாடுது
நெஞ்சோரம் பாயும் செந்தூரம்
அஞ்சாறு நாளா மந்தாரம்
எம்பாடு திண்டாட்டம்தான் அடிப்புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் முடிஞ்சு போச்சு
மாலை வேளை போதை ஏறும் அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.