Song lyrics

Pani neer thelikkum Lyrics

பனி நீர் பூ தெளிக்கும் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Raghu Kumar
Year
1987
Singers
K. J. Yesudas
Lyricist
Gangai Amaran
Pani neer thelikkum

Lyrics

Pani neer thelikkum Lyrics

பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே 
மலர்கள் மலர நதிகள் பாட 
வேளையில் வந்த என் காதல் தேவி

பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே 
மலர்கள் மலர நதிகள் பாட 
வேளையில் வந்த என் காதல் தேவி 
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே

கோலம் நெஞ்சில் எழுதும் 
உன்னைக் கூடி குலவும் ஆனந்தம்
கோலம் நெஞ்சில் எழுதும் 
உன்னைக் கூடி குலவும் ஆனந்தம்

மன்மத மந்திரம் சொல்லும் உன்னை 
மார்போடு கூடிட ஆனந்தம்
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே

நாணம் கொண்டு சிரிக்கும் உன்னை 
நாடிடும் எந்தன் இள நெஞ்சம் 
நாணம் கொண்டு சிரிக்கும் உன்னை 
நாடிடும் எந்தன் இள நெஞ்சம்

செவ்விதழ் சிந்திய தேனில் என் மனம் 
தேடாமல் தேடும் பூ மஞ்சம்
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும் அதிகாலையிலே

People

Related People

5 people