புள்ள புள்ள வயசு பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Koyil Maniyosai (1988) (கோயில் மணியோசை)
Music
Gangai Amaran
Year
1988
Singers
Mano, K. S. Chitra
Lyrics
Gangai Amaran
ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...

ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்...
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.......
ஆண் : ஓ...ஓ... புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள..
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...

பெண் : தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்

ஆண் : ஓ..தெக்கு பக்க காத்து வந்து
சேதி ஒண்ணு சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி
அடி மானே இனி நானே உனக்கு...
பெண் : நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க
சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்

ஆண் :புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள...யாருமில்ல...
ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா..
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.......
ஆண் : ஓ...ஓ... புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள...யாருமில்ல...

ஆண் : மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது

பெண் : பத்து விரல் பட்டதிலே
வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள
ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அடங்காத ஒரு தாகம் எனக்கு
ஆண் : நீ வக்கிற பொட்டுல வாசனை பூவுல
நானும் இருக்கேன் பக்கத்தில

பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா...
ஆண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்....

பெண் : புள்ள புள்ள வயசுப்புள்ள...ஹா
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...


இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.