உறவென்னும் புதிய வானில் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Nenjathai Killathe (1980) (நெஞ்சத்தை கிள்ளாதே)
Music
Ilaiyaraaja
Year
1980
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Gangai Amaran
உறவென்னும் புதிய வானில் 
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும் 

ப.ப.ப.பா...

நினைவிலும் 

ப.ப.ப.பா..

புது சுகம்

ப.ப.ப.பா...

உறவென்னும் புதிய வானில் 
பறந்ததே இதய மோகம்


பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்

மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே

கனவில் ஆடும் நினைவு யாவும் 
கனவில் ஆடும் நினைவு யாவும் இனிய பாவம்

உறவென்னும் புதிய வானில் 
பறந்ததே இதய மோகம்


நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்

எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம்

இணைந்த கோலம் இனிய கோலம் 
இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம்

உறவென்னும் புதிய வானில் 
பறந்ததே இதய மோகம் கனவிலும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.