செண்பகமே செண்பகமே (ஆண்) பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Enga ooru pattukaran (1987) (எங்க ஊரு பாட்டுக்காரன்)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
Mano
Lyrics
Gangai Amaran
பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனச
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் கறக்க
துடிக்குதந்த செண்பகமும்

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாத
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பாத்துக் காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பாத்துக் காத்து நின்னேனே

உன் முகம் பாத்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னால
எப்போதும் ஒன்னத் தொட்டு
பாடப்போறேன் தன்னால

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

மூணாம்பிறையைப் போலக்
காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போலக்
காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ
எள்ளுப்பூ நாசி பத்திப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரென் பாட்டு
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.