Muthu Therey Lyrics
முத்துத் தேரே தேரே பாடல் வரிகள்
Last Updated: Mar 28, 2023
முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே இங்கே வேறே யாரே
ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது
கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது
முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
உள்ளங்காலும் உள்ளங்கையும்
சில்லென்றாகும் வண்ணம்
உன்னைப் பாதி என்னைப் பாதி
ஊதக் காற்று தின்னும்
வெப்பம் ஏற வேண்டும் வேகம்
தெப்பம் போல ஆட
வெட்கம் வந்து மேலும் கீழும்
வெள்ளம் போல ஓட
அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ
மாலையும் மேளமும் கூடினால் நீங்கலாம்....(முத்து)
எட்டிப் பார்க்க யாரும் இல்லை
கட்டிப் பார்க்க வேண்டும்
ம்... கட்டிப் பார்த்தால் தப்புச் செய்ய
கையும் காலும் தூண்டும்
அங்கம் யாவும் மின்னுதம்மா
தங்கப் பாளம் போலே
அந்தம் ஆதி அளப்பதென்ன
உந்தன் பார்வையாலே
ஹா எல்லாம் உன் ஏக்கமே இங்கேது தூக்கமே
தன்னானா னான்னனா இங்கேது தூக்கமே
ஏக்கமே தீர்க்கவே நாளை நான் பார்க்கிறேன்....(முத்து)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.