Song lyrics

Maaraappu Chela Lyrics

மாராப்பு சேலை பாடல் வரிகள்

Last updated Oct 02, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Mano, K. S. Chithra
Lyricist
Gangai Amaran
Maaraappu Chela

Video

Maaraappu Chela

Lyrics

Maaraappu Chela Lyrics

ஆண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
மச்சானப் பாத்து வரையாதோ ஓலை

பெண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
மச்சானப் பாத்து வரையாதோ ஓலை

பெண் : செந்தூரப் பூ மேல தென் பாண்டிக் காத்தாட
ஆண் : மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட
பெண் : தட்டாம தட்டத் தாளம் கொட்டத் தாலி நீ கட்டு

ஆண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
பெண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை

ஆண் : ஆனிப் பொண்ணு ஆளானது ஆனந்த ராகம் பாடியது
பெண் : தோணிக்குள்ள பூவானது சொல்லாமத் தானா மூடியது
ஆண் : பாலோடும் ஓட ஓஹோஹோஹோ படகோட்டும் வேளை
பெண் : காணாத ஜடை ஓஹோஹோஹோ கண் காட்டும் வேளை
ஆண் : தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட

பெண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
ஆண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை

பெண் : மேனிக்குள்ள மின்னல் வெட்டு மெத்தையில் தீபம் ஏற்றியது
ஆண் : வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு வாலிப மனச மாத்தியது
பெண் : தானாக ஊறும் ஓஹோஹோஹோ ஆனந்த ஊற்று
ஆண் : தேனாகப் பாயும் ஓஹோஹோஹோ மானே உன் பாட்டு
பெண் : பூ பாணம் போட காதல் கூட கன்னி பெண் தேட

ஆண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
பெண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை
ஆண் : செந்தூரப் பூ மேல தென் பாண்டிக் காத்தாட
பெண் : மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட
ஆண் : தட்டாம தட்டத் தாளம் கொட்டத் தாலி நான் கட்டு

இருவர் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
மச்சானப் பாத்து வரையாதோ ஓலை
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people