நீ பிறந்தபோது விளையாட பாடல் வரிகள்

Movie Name
Sattam Oru Vilaiyattu (1987) (சட்டம் ஒரு விளையாட்டு)
Music
M. S. Viswanathan
Year
1987
Singers
Vidya
Lyrics
Gangai Amaran

நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை
உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை
நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை
உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை
நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு
சட்டம் ஒரு விளையாட்டு...

சட்டம் அது சிறு பொம்மை நீ
சொன்னால் அது தலையாட்டும்
திட்டம் யாரு போட்டாலும்
உன் முன்னே வந்து வாலாட்டும்

வட்டம் மாவட்டம் திட்டம்
எல்லாமுன் பாக்கெட்டுலே
தினசரி வரவு உனக்கில்லை செலவு
அதிசய பிறவியம்மா அதிசய பிறவியம்மா

நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை
உங்கம்மா கொடுத்தா
கையில் நம்மூரு சட்டங்களை
நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு
சட்டம் ஒரு விளையாட்டு...

நீயே ஒரு அரசாங்கம்
நீ நெனச்சா போதும் வழி மாறும்
நேரம் காலம் கையோடு
உன் நிழலாய் வந்து நடை போடும்

பூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே
வேஷமும் கலையும் ஒரு நாள் புரியும்
மாத்திக்க மனதை இப்போ
மாத்திக்க மனதை இப்போ ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.