புதுச நெனச்சுக்கிட்டு பழச பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Chidambarathil Oru Appasamy (2005) (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
Music
Ilaiyaraaja
Year
2005
Singers
Ranjith, Tippu
Lyrics
Gangai Amaran

ஹா புதுசா ஒரு சரக்குடா
அத குடிச்சா செம்ம வெறப்புடா
வெரசா வெளுத்து வாங்குடா
இத மறுத்தா நீ மனுசனில்லடா

புதுச நெனச்சுக்கிட்டு பழச மறக்குறவன்
பூமியில் மனுசனில்லடா
இந்த பூமியில் மனுசனில்லடா

அட பழைய கதைய இப்போ நெனச்சு பாக்க இங்கு
பானம் ஒண்ணு கொண்டு வந்தேண்டா
இது ஒனக்கு பர்மனென்டு ஆக வேணும் டா
ஹே டிங்கா டிங்டி டிங்கு டிங்கா
ஹே டிங்கா டிங்டி டிங்கு டிங்கா

பழைய தவறுகள திரும்பப் போயி
அத திருத்த முடியாதுடா
திரும்பத் திருத்த முடியாதுடா
பழைய படுக்கை என பள்ளத்துல தள்ளுறவன்
பாவிகளின் தலைவனடா
அவன் பாவிகளின் தலைவனடா

ஹே குடும்பத்த விட்டுப் புட்டு ஒதுங்குற
காவி உடுப்ப உடுத்திக்கிட்டு பதுங்குற
ஹே குடிக்க எதுக்கு என்ன தொறத்துற
எதுக்கு வயத்தில் வாயில் அடிச்சு துடிக்கிற (புதுசா)

சாமிக்கு படச்சு வெச்ச சரக்கு இங்க இருக்கு
சத்தியமா சாமி கிட்டக் கேளு
ஒனக்கு சந்தேகம் எதுக்கிங்க கூறு
குளிச்சு குளிச்சு தன்னை கொடுக்க மழை இருக்கு
நமக்கு குடிச்சு இந்த சாறு
இந்த மயக்குற தனி சுகம் தேடு

அட இப்பாத எப்போதும் எப்போதும் மாறாதே
நீ ஒத்திப் போ உன் பாத என்னோடு சேராதே
ஹே முன்னாளில் வானோர்கள் சாப்பிட்ட பானம் தான்
இந்நாளில் வேண்டான்னு சொல்லாதே நீயும் தான்

ஹே சாப்பாட்ட மூணு பேரும் பங்கு போட்டு சாப்பிட்ட
அந்த நாள மறக்காதே ஹேஹே ஹேஹே
அட சாப்பாடு இல்ல இது சாக்கடைக்குள் தள்ளும் இது
சத்தியத்தைக் கெடுக்காதே
அட போட்டுக்கிட்ட ஆளுகள புத்தி சொல்லும் காலம் இது (புதுச )

வீட்டுல ஒருத்தி உண்டு விதிக்கென்ன டைம் உண்டு
தொறவு மனம் எதுக்கு தோழா
அத தொலச்சு எறிஞ்சு விட்டு வாடா
வயசு உள்ள வரைக்கும் வாலிபம் துணை இருக்கும்
வசந்தக் குளத்தில் ஆட வாடா
இந்த அமுதம் குடிச்சு துள்ளிப் போடா

அட காட்டோர கள்ளிக் கத்தாழ பூ வாசம் வீசாத
அத வீட்டோரம் வச்சாலே யாருக்கும் ஆகாது
அட என் பேச்ச அன்போடு நீ கேக்கக் கூடாதா
வரும் உன் போல
கொண்டாட்டம் போட்டாக்கா தப்பாடா

ஹேஹே துன்பத்த தீர்த்து வைக்கும்
சந்தோஷ தீர்த்தத்த பாவமின்னு நெனைக்காதே
தண்ணீரில் நீராடி நிக்கிறவன் என்ன நீ
கூவத்துல தள்ளாதே அட ஒன்னாட்டம் வீணான
ஜென்மங்கள் எங்கும் இல்ல....( புதுச )

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.