பொண்ணா பொறந்த இந்தப் பாவம் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Chidambarathil Oru Appasamy (2005) (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
Music
Ilaiyaraaja
Year
2005
Singers
Manjari
Lyrics
Vaali

பொண்ணா பொறந்த இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்
கணவனைத் தேடி அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மா....(பொண்ணா)

காற்றோடு வெயிலோடு மழை வந்த போதும்
தாங்கும் மண் தாய் போல பெண் அவள்
கல்லோடு புல்லோடு தமை தோண்டும் போதும்
தடுக்காத மண் போல பெண் அவள்

சுமைகளை தாங்காத சுமைதாங்கி உண்டோ
சுமை கண்டு சோர்கின்ற பெண் எங்கு உண்டோ
கண்ணுக்குள்ளே கண்ணீரின் ஆறொன்று
கன்னத்திலே பாயாமல் பாப்பாளே...(பொண்ணா)

உனை நம்பி உள்ளோரை நீ மறந்து வந்தால்
நீ நம்பும் தெய்வங்கள் உனைக் காக்குமா
அவள் கண்ட துன்பத்தில் உன் பங்கு இல்லை
இன்பங்கள் இங்குன்னைச் சேருமா

அப்போதும் உன் போதை தவறான போதை
இப்போதும் உன் பாதை தவறான பாதை
தன் கடமை தவறிடும் பேர்க்கெல்லாம்
வேண்டியதை தெய்வங்கள் காட்டாது...(பொண்ணா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.