Nalla Vaazhvu Lyrics
நல்ல வாழ்வு தொடங்கும் பாடல் வரிகள்
நல்ல வாழ்வு தொடங்கும் நாளும் உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன் கண்ண தொறந்து பாத்தது
வீடெல்லாம் வெளங்க முத்து வெளக்க ஏத்துங்க
கேடெல்லாம் வெலக வண்ண மால சாத்துங்க (நல்ல)
வீடு வாசல் தோட்டமுன்னு
வாழ்பவன பாத்துப் புட்டா
வாய் பொளந்து வயிறெரியும் ஊரு
தங்க நிழல் ஏதும் இன்றி
வாழ்ந்திருக்கப் பாத்துப் புட்டா
தாளம் கொட்டி சிரிச்சிருக்கும் பாரு
ரெண்டும் கெட்ட ஊரு பொத்துக்கிட்டு போகாம
ஒண்ண நம்பும் எண்ணம் விட்டுப்புட்டு போகாம
நல்ல வழி தந்த சாமிக்கு நன்றி என்ன சொல்வேன் (நல்ல)
சாமியே சரணம் அய்யப்பா சாமியே சரணம் அய்யப்பா
சாமி திந்தகத்தோம் சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
சாமி திந்தகத்தோம் சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
எங்கே ஒரு பாதை என தேடித் திரிந்தால்
இங்கே உன் பாதை என காட்டிக் கொடுப்பான்
நாளும் நிலை மாறும் இந்த பொய்யர் உலகில்
நீயே வந்து சேர்வாய் இங்கு உண்மை வழியில்
ஏழைக்கிறைவன் எங்கள் பந்தள ராஜனடா
ஏத்திப் புகழும் எந்த சாதிக்கும் நேசனடா
உன் மலை ஏறும் மனுசனுக்கு
மண்ணில் வாழ்க்கை உண்டு...(நல்ல)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.