ராஜநடை நடந்து வரும் பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Madhurakara Thambi (1988) (மதுரைக்கார தம்பி)
Music
Chandrabose
Year
1988
Singers
Malasiya Vasudevan, B. S. Sasireka
Lyrics
Mu. Metha
ஆண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

பெண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி தான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி தான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி தான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி தான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுக்க வேணும் சாமி

ஆண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்

ஆண் : நல்ல நல்ல மனிதருக்கு நல்லசாமி நான்
நன்றியோடு வாழும் நல்ல புள்ள சாமி நான்
கேட்டவருக்கு கை கொடுக்கும் கிருஷ்ண சாமி நான்
கேடு கெட்ட கூட்டத்துக்கு துஷ்ட சாமி நான்

பெண் : நெனச்சா வந்திடும் துரைசாமி
மொறச்சா நீயொரு முனிசாமி
ஆண் : அய்யா சொன்னா பொய்யாகுமா
ஆயிரமாய் இங்கு சாமி

ஆண் : ராஜநடை நடந்து வரும்
குழு : ராமசாமி தான்
பெண் : ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
குழு : ரங்கசாமி தான்
ஆண் : தருமனுக்கு அடுத்தபடி
குழு : தங்கசாமி தான்
பெண் : வேளை வந்தால் வேல் எடுக்கும்
குழு : வேலுசாமி தான்
ஆண் : எந்த சாமி நல்ல சாமி
குழு : தேர்ந்தெடுக்க வேணும் சாமி

ஆண் : தருமம் உள்ள மனுசனெல்லாம் சாமியாகலாம்
தாய்மையுள்ள மனசு எல்லாம் கோவிலாகலாம்
கருணையுள்ள மனுஷன் இங்கே தேவன் தானடா
கைக் கொடுக்கும் போது காவல் தெய்வம் நீயடா

பெண் : மனுஷன் தேடுறான் கடவுளதான்
கடவுள் தேடுறான் மனுஷனத்தான்
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே
கடவுளுக்கும் மனுஷனுக்கும்

ஆண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

பெண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி தான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி தான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி தான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி தான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுக்க வேணும் சாமி