சுருட்டு புடிக்கிற வயசுல பாடல் வரிகள்

Movie Name
Madhurakara Thambi (1988) (மதுரைக்கார தம்பி)
Music
Chandrabose
Year
1988
Singers
Mano, Sridhar
Lyrics
Mu. Metha
சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா
பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா

சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

அலங்காரி சிங்காரி நோட்டம் போட்டா குட்டி
அரைகொறையா உடுத்திக்கிட்டு ஆட்டம் போட்டா
தள்ளாடி நீ இங்க கூட்டம் போட்டா
எங்க பாட்டி இத கேள்விப்பட்டா தாங்கமாட்டா

குடுகுடு கெழவனுக்கு மனசுல ஒளிஞ்சிருக்கும்
ஆசைய தூண்டி விட்டா தவறுகள் அதிகரிக்கும்
நடிக்குது துடிக்குது நாடகம் நடக்குது
சுருட்டு...ஹோய்.....சுருட்டு......ஹோய்.....

சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

கையாலே மாக்கோலம் போட்டதில்ல குட்டி
கண்ணு ரெண்டும் கோலம் போடும் ஊருக்குள்ள
பட்டாடை கட்டாத சின்ன ரோசா கண்ணு
பட்டாலே கவிந்துடுவான் எங்க ராசா

பழகுற ஆம்பளைக்கும் பாத்திட கூச்சம் வரும்
படிக்கிற பையனுக்கோ பாத்ததும் காய்ச்சல் வரும்
காருல ஏறுங்கடி ஊர விட்டு ஒடுங்கடி
சுருட்டு...ஹோய்.....சுருட்டு......ஹோய்.....

சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா
பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா

சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.