தென்ன மரத் தோப்புக்குள்ள பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Michael Raj (1987) (மைக்கல் ராஜ்)
Music
Chandrabose
Year
1987
Singers
Malaysia Vasudevan, Vani Jayaram
Lyrics
Mu. Metha
ஆண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவா
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவா

இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி
இந்த ராணி கிட்ட கச்சிதமா பழகி
அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்

பெண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவேன்
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவேன்

நம்ம ஊருக்குள்ள நான் ஒரு அழகி
என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி
இந்த பொன்னான மனசுல புகுந்துக்குவேன்

ஆண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவா

ஆண் : பச்சக்கிளி கொத்துனது செவந்திருக்கு
செம்பவள ஒதட்டுல சிரிப்பெதுக்கு
பெண் : தோட்டத்துல மன்மதனின் காத்தடிச்சு
நேத்து வச்ச ஒட்டுச்செடி பூத்திருச்சி

ஆண் : பஞ்சு மெத்தை எனக்கங்கு விரிச்சாச்சு
பாய் விரிக்க வேற எடம் கெடச்சாச்சு
பெண் : தண்ணிக் கொடம் தூக்கிட்டு நடந்தாலே
தளும்புது என் மனசு மாமா
ஆண் : அட நானிருக்கேன் பாத்துக்கிறேன்
ஆத்துப் பக்கம் வாம்மா

பெண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவேன்
ஆண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவா

பெண் : மச்சு வீடு ஒண்ணு அங்கு உனக்கிருக்கு
மண்ணு வீடு கட்டிக்கிற நெனப்பெதுக்கு
ஆண் : மண்ணு வீடு கட்டுறது சரிதாம்மா
சின்ன வீடு எனக்கொண்ணு வேணாம்மா

பெண் : பக்கத்துல பத்து பேரு இருக்கையிலே
பக்குவமா எப்படி நீ கூப்புடுவே
ஆண் : வெத்தலையில் சுண்ணாம்ப தடவி கிட்டு
வெரலால ஜாடை செய்யலாமா
பெண் : அட கம்மாங்கர ஓரத்தில காத்திருப்பேன் ஆமா....

ஆண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவா
பெண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவேன்

ஆண் : இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி
பெண் : என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி
ஆண் : அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்

பெண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவேன்
ஆண் : தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒண்ணு தருவா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.