ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் பாடல் வரிகள்

Movie Name
Kadaikan Parvai (1986) (கடைக்கண் பார்வை)
Music
V. S. Narasimhan
Year
1986
Singers
Vani Jayaram
Lyrics
Mu. Metha

ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே....

ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே....

பாடங்கள் கேட்போம் பாடலும் கேட்போம்
பள்ளிக்கூடம் தன்னிலே
காலம் மாறும் ராகம் மாறும்
மாறாது நம் ஞாபகம்

வீட்டுப் பாடமே நோட்டில் தீட்டினோம்
பாட்டை வீட்டில் போய் பாடிக் காட்டினோம்
தேனை தமிழில் பார்த்தோம்
சேர்ந்தோம் கணக்கிலே
ஞானம் அவ்வை ஞானமே

ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே....

ஊரும் வேறு பேரும் வேறு
ஒன்று சேர்ந்த உறவே
தேசம் மாறும் வாசம் மாறும்
மாறாது நேசங்களே

ஆடிப்பாடினோம் சேர்ந்து கூடினோம்
இன்று ஆளொரு பாதை மாறினோம்
தாவும் முயலைப் போலே
வாழ்ந்தோம் மகிழ்விலே
பாசம் நம் நெஞ்சத்திலே

ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும்
நாளை நாமே இங்கு காண்போமே
போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே
போய் வா என் பூந்தென்றலே....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.