Song lyrics

Kaalam Poranthiruchu Lyrics

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Chandrabose
Year
1987
Singers
K. J. Yesudas
Lyricist
Mu. Metha
Kaalam Poranthiruchu

Lyrics

Kaalam Poranthiruchu Lyrics

தானாதனனன்ன தன்னானானே
தானாதனனன்ன தந்தனானானே

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே

நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே

சந்திரனை பிடித்து சின்ன மயிலே
தந்தவர்கள் இல்லை சின்ன மயிலே
நந்தவனம் உன்னை சின்ன மயிலே
பந்தடிக்கும் உலகம் சின்ன மயிலே

தங்க ரதங்கள் அருகினிலே
வந்ததெல்லாம் கனவுகளே
வாழும் அன்பின் உறவினிலே
வாசல் தேடும் உயர்வுகளே
இமயம் நம்மை எழுந்து பார்க்கும்

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே

அஞ்சுகிற முகத்தை பார்ப்பதற்கு
ஆறுமுகம் கூட வருவதில்லை
நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு
வஞ்சகரின் உலகில் பயமெதற்கு

ஓடும்போது துரத்துமடி
ஒதுங்கி நின்றால் விரட்டுமடி
சீறி எழுந்தால் வணங்குமடி
தீர்ப்பை மாற்றி எழுதுமடி
பூவும் புயலை எதிர்த்து நிற்கும்

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே

நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people