நட்சத்திர ஜன்னலில் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Suryavamsam (1997) (சூர்யவம்சம்)
Music
S. A. Rajkumar
Year
1997
Singers
Mano, Sunandha
Lyrics
Mu. Metha

நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம்
உறவில் உலகை அளப்போம்

விளையாடலாம் நிலாவிலே
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப் போடு புது
வாழ்வின் கீதம் பாடு.......(நட்சத்திர..)

சித்திரங்களைப் பாடச் சொல்லலாம்
தென்றலை அஞ்சலொன்று போடச் சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்

பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஒட்டலாம் ஒட்டலாம்
சொர்க்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே வருந்தி
அழுவதில்லை வணங்கி விழுவதில்லை..(நட்சத்திர..)

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தன மழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்

சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித் தந்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா

ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு
புது வாழ்வின் கீதம் பாடு.......(நட்சத்திர..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.