Kadhala Kadhala Lyrics
காதலா காதலா பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
காதலா காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்......(காதலா)
இதயத் துடிப்பினில் ஓசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள் வீசவில்லை
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ........(காதலா)
பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனித் துளியானேன்
பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன
மலர்களெல்லாம் பொன் முளைப்பதென்ன
ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன
ஏனிந்த மாற்றமோ........(காதலா)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.