இரவா பகலா குளிரா பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Poovellam Kettuppar (1999) (பூவெல்லாம் கேட்டுப்பார்)
Music
Yuvan Shankar Raja
Year
1999
Singers
Hariharan, Swetha Mohan
Lyrics
Palani Barathi
இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம் தானா

இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மழையினில் மேகம் தூங்க மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்

இரவா பகலா குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாதடா
கடலா புயலா இடியா மழையா நம்மை ஒன்றும் செய்யாதடா
இரவா பகலா குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாதடா
கடலா புயலா இடியா மழையா நம்மை ஒன்றும் செய்யாதடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.