இந்த பொறப்புத்தான் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Un Samayal Arayil (2014) (உன் சமையல் அறையில் )
Music
Ilaiyaraaja
Year
2014
Singers
Kailash Kher
Lyrics
Palani Barathi
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
ஸ்.. ஆஹா.. ஸ்.. ஆஹா..
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட
அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
இந்த பொறப்புத்தான்
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது

தாமிரபரணி திருநெல்வேலி சோதியில ஒரு தனிருசி
வைகையில் புடிச்ச ஆயிர மீனு கொழம்புக்கு ஒரு தனிருசி
திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
தென்காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
அம்மாவின் வாசம் முன்பு வேப்பம்பூ கொழம்புக்கு
அவ தானே ஊட்டித்தந்தா ஆகாய நெலவுக்கு
உணவிலே ஒரு உறவு இருக்குது
உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது
பொறப்புத்தான் ஆஹா ஹா…
அத நெனச்சு தான் ஆஹா ஹா…
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது

கத்திரி வெயிலு கொதிக்கும் போது பானகம் கரைச்சு குடிக்கணும்
கொட்டுற மழையில் குளிரும் போது காரச்சேவு கொஞ்சம் கொரிக்கணும்
ஆல்வள்ளி கிழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி
ஓலை கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி
கருப்பட்டி சுக்கு மல்லி காபிக்கு என்ன ருசி
ஊரோரம் ஒத்தபனை கள்ளுக்கு என்ன ருசி
பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில
ஒவ்வொரு சுவைக்கும் மனசு லயிச்சிது
பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அட சுடச்சுட
அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது கிடைச்சது கிடைச்சது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.