Song lyrics

Nilavu Paatu Lyrics

நிலவுப் பாட்டு பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
2000
Singers
Hariharan
Lyricist
Palani Barathi

Lyrics

Nilavu Paatu Lyrics

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

People

Related People

4 people