கோடி கோடி மின்னல்கள் பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Jayam (2003) (ஜெயம்)
Music
R. P. Patnaik
Year
2003
Singers
Vijay Yesudas
Lyrics
Palani Barathi
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
மூச்சிலே புது வாசனை
இது ஏனம்மா?
இளைய மனதில் காதல் பிறந்த நேரமா?

கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?

சாரல் விழும் நேரம் வானவில்லை போலே
தோன்றிடும் அழகான காதல்
ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும்
இளமையின் சங்கீதம் காதல்
ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக
இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா?
அழகு பாதம் பார்த்து அவன் சுப்ரபாதம் பாட
சினுங்கும் கொலுசு சுருதி சேர்க்குமா?

கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?

ஓர விழிப் பார்வை தீபங்களை ஏற்றி
வைத்ததோ நெஞ்சோடு இன்று
தென்றல் என வந்து தொட்டுச் சென்ற காதல்
கலந்தது மூச்சோடு இன்று
காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா

கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
மூச்சிலே புது வாசனை
இது ஏனம்மா?
இளைய மனதில் காதல் பிறந்த நேரமா?

கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ம்ம்ம்ம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.