Naan Thanga Roja Lyrics
நான் தங்க ரோஜா பாடல் வரிகள்
நான் தங்க ரோஜா என்னைப்
பறிக்க வருவாயா
நான் கிரேக்கச் சிற்பம் என்னை
ரசித்துப் பார்ப்பாயா
என் இளமைக் கடலோரம்
உன் அலைகள் விளையாட
என் உடைகள் கரையோரம்
உன் நினைவில் உனைத் தேட
நீச்சல் போடு நீரில் என்னோடு……(நான் )
நெருப்பு என்ன நெருப்பிது
அணைக்கும் பொழுதினிலும் வளருது
உதடு தேடும் உதடுகள்
உயிரை உறிஞ்சிவிட நினைக்குது
அழகு மலர்கள் வரிசையில் குலுங்குது
அதனை இதனை ரசிக்குது விழிகள்
விருந்து படைக்க இளமையும் துணிந்தது
இருந்தும் திருட நினைக்குது விரல்கள்
மோகமூச்சில் தேகம் தீப்பிடிக்கும்
ஈரப்பூவின் உள்ளே தேன் கொதிக்கும்
காட்டு வெள்ளம் பூட்டி வைத்தால்
கரைகள் என்னாகும்……….. (நான் )
நிலவு வெள்ளை நிலவினில்
சிலையை வடித்த விதம் இனியது
இரவு இந்த இரவினில்
அழகை ரசிக்கும் விதம் இனியது
உலுப்ப உலுப்ப உதிர்ந்திடும் கனிகளை
எடுத்துச் சுவைக்கத் துடிக்குது இதயம்
இடுப்பை வளைக்கும் இளையவன் கரங்களில்
சிணுங்கிச் சிணுங்கித் தவிக்குது பருவம்
மோகம் வந்தால் நாணம் தேவையில்லை
ஆஹா...முத்தம் தந்தால் தேகம் தேய்வதில்லை
கட்டில் ஓசை ஒன்றுதானே நல்ல சங்கீதம்
நான் தங்க ரோஜா என்னைப் பறிக்க வருவாயா....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.